இது ஒரு தமி்ழர்களுக்கான ஒப்பற்ற இணையதளம்


Join the forum, it's quick and easy

இது ஒரு தமி்ழர்களுக்கான ஒப்பற்ற இணையதளம்
இது ஒரு தமி்ழர்களுக்கான ஒப்பற்ற இணையதளம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Navigation
 Portal
 Index
 Memberlist
 Profile
 FAQ
 Search
More gold, cash tumble out of Sai Baba's cupboards

Wed Jul 20, 2011 12:23 am by Admin

ஸ்ரீ ஜெயேந்திரர் இப்போது... Sai-baba-220411-60

Hyderabad, July 19 (IANS) Cash, gold and silver continue to tumble out of cupboards in the late Sathya Sai Baba's residential quarters in Puttaparthi town of Andhra Pradesh, with valuables worth nearly Rs.59 crore being found so far in three rounds of counting.
In the latest round of inventory taken up Monday at Yajur Mandir in Prashanti …

Comments: 0

டில்லியில் கருணாநிதியை கண்டுகொள்ளாத காங்கிரஸ்

Tue Jul 19, 2011 8:44 am by Admin

ஸ்ரீ ஜெயேந்திரர் இப்போது... Large_264358

தன் மகள் கனிமொழியை சிறையில் பார்க்க, இரண்டாவது முறையாக, டில்லி வந்திருந்தார் தி.மு.க., தலைவர் கருணாநிதி. முதன் முறை வந்த போது, …

Comments: 0

Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

ஸ்ரீ ஜெயேந்திரர் இப்போது...

Go down

ஸ்ரீ ஜெயேந்திரர் இப்போது... Empty ஸ்ரீ ஜெயேந்திரர் இப்போது...

Post by G. Soundara Rajan Thu Jun 23, 2011 7:04 pm




ஸ்ரீ ஜெயேந்திரர் இப்போது...

அது தீபாவளிக்கு மறுநாள் -

ஞாயிற்றுக்கிழமை. நடுப்பகல் நேரம். வெயில் தகித்துக் கொண்டிருந்தது.

இடம் : காஞ்சிபுரம் - சங்கர மடம்.

மடத்தின் உள்ளே நுழையும்போது, ஒருவித குளுமை. பக்தர்கள் நிரம்பி இருந்தார்கள். மகா பெரியவரின் சமாதி அருகே, பெரும் கூட்டம். தீபாராதனை நடந்து, தீர்த்தம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். பக்தர்கள் 'ஹர ஹர சங்கர.. ஜெய ஜெய சங்கர' என்று கூறியவாறு பக்தியுடன் தீர்த்தத்தைப் பெற்று, கீழே விழுந்து கும்பிட்டார்கள்.

எதிரிலிருந்த அறையிலிருந்து வெளிப்பட்டு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் 'கலகல'வென்று சிரித்தவாறு இருக்கையில் அமர்ந்தார். பக்தர்கள் வரிசையில் நின்று, பூ பழங்களை அவர் காலடியில் வைத்து ஆசி பெற ஆரம்பித்தார்கள். ஒவ்வொருவரையும் நலன் விசாரித்தார் ஸ்ரீ ஜெயேந்திரர். மழை விழுந்த மண்ணுக்கு ஏற்படுகிற மகிழ்ச்சி பக்தர்களுக்கு!

முழு நிலாவைப் போல அவர் முகம் ஜொலித்தது. விழிகளில் கருணை. பிரச்னையோடு வந்த பக்தர்களை, 'கவலை வேண்டாம்.. .. ஓடிப்போயிடும் இனிமே' என்று அவர் சிரித்தவாறு சொல்கிறார்.... அது ஓர் அற்புதக் காட்சி.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு -

2004 - நவம்பர் 11.

இதே தீபாவளி சமயத்தில் மடத்தின் பக்தர்கள் மனம் இருண்டு அல்லவா கிடந்தது! எத்தனை எத்தனை அபவாத செய்திகள்! தமிழக மீடியாக்களின் தடுமாற்றம் வேறு..

இதோ - அதன் நிழல்கூட படியாதவாறு - கம்பீரமாக சுவாமிகள்..

பக்தர்களில் சிலர் உணர்ச்சிவயப்பட்டு பாடினார்கள்.. சுவாமிகளிடம் சிலர் 'சங்கரா டி.வி' தமது பகுதியில் தெரியவில்லை என்றனர். 'சீக்கிரம் தெரியும்' என்றார். சுவாமிகள் ஏற்பாடு செய்திருக்கும் டி.வி. ஒளிபரப்பு அது.

சுமார் ஒரு மணி நேரம் கழித்து சுவாமிகளிடமிருந்து அழைப்பு வருகிறது. அப்போது பிற்பகல் 2 மணி ஆகிவிட்டிருந்தது.

''சூரிய கதிர்.. என்ன மாதிரி பத்திரிகை'' என்று விசாரிக்கிறார். ''சரஸ்வதி இருக்கிறாள். யார் லட்சுமி?'' என்று அதாவது பணம் போடுபவர் யார் என்று நகைச்சுவையுடன் கேட்கிறார். 'சரஸ்வதியும் இருந்து லட்சுமியும் இருக்கிறார். பிறகு என்ன? சூரிய கதிர் ஜெயிக்காமல் இருக்குமா?''.

- சிரிக்கிறார்.

''தாராளமாக கேள்விகளைக் கேளுங்கள்'' என்றார் சுவாமிகள்.

''மகா பெரியவர் தங்களைத் தனது சீடராக தேர்ந்தெடுத்ததற்கு காரணம் என்ன?'' என்பது முதல் கேள்வி.

''அது எனக்குத் தெரியாது. மகா பெரியவரிடம் தான் கேட்டிருக்க வேண்டிய கேள்வி'' என்று புன்னகைத்தவாறு - மடத்துக்கு தான் வந்து சேர்ந்ததைப் பற்றிக் கூற ஆரம்பித்தார்.

''எட்டு வயதில் எனக்குப் பூணூல். விழுப்புரம் பீம நாயக்கன் பள்ளிக்கூடத்தில் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயில் கும்பாபி஦#183ேகத்துக்காக வந்து கொண்டிருந்த மகா சுவாமிகள் விழுப்புரத்தில் தங்கினார். அப்போது எங்கள் குடும்பத்தோடு நான் அவரைத் தரிசித்தேன். பார்த்தவுடன் பிடித்துப் போய்விட்டது. 'நீ மடத்துக்கு வர்றியா...' என்று என்னைப் பார்த்து கேட்டார். உச்சிக்குடுமி அசைய சம்மதம் என தலையசைத்தேன்'' என்று பெரியவர் வாய்விட்டுச் சிரிக்கிறார். இதுவே மகா பெரியவருடனான இவரது முதல் சந்திப்பு. இத்தருணத்தில் அவரும் அவரது (பூர்வாசிரம) சகோதரர்கள் விஸ்வநாதன், ராமகிரு஦#183்ணன் எல்லோருமே எப்போதும் உச்சிக்குடுமி இல்லாமல் இருந்ததில்லையென நினைவுகூர்கிறார்.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு மகா சுவாமிகளுடைய பூர்வாசிரம கடைசி சகோதரர் ஸ்ரீ கிரு஦#183்ணமூர்த்தி சாஸ்திரிகள்தான் இவருக்கு வேத பாட சிட்சையை காஞ்சியில் வைத்து ஆரம்பித்திருக்கிறார்.

இதுகுறித்து ஸ்ரீ ஜெயேந்திரரே தொடர்ந்தார்:

''இந்த மடத்தில் ஒரு பெரிய வி஦#183யம் என்னன்னா அவா தெலுங்கரா இருக்கலாம், கன்னடமாவோ - தமிழாவோ.. மராட்டியாவோ இருந்திடலாம்.. ஆனால் ரிக் வேதியரா இருக்கணும்னு ஒரு விதி இருக்கு. நான் ரிக் வேதியரா இருந்ததால் விசாரித்துவிட்டு வேதம் படிக்கச் சொன்னார் மகா பெரியவா..

பெரியவர் கிறிஸ்டியன் இங்கிலீஸ் ஸ்கூல்ல திண்டிவனத்

துல படிச்சவர். இங்கி

லீ஦#183் நாடகத்துக்கெல் லாம் கூட பரிசு வாங் கினவர். ஆனால், அவ ருக்கு அதிகம் வேதம் படிச்சு பழக்கமில்லை. அப்படியே மடத்துக்குக் கூப்பிட்டதும் வந்துட்டார். அந்தக் குறை அவருக்குள்ள இருந்தது.. அடுத்த வாரிசை வைக்கும்போது

எப்படியாவது வேதம் படித்தவரை வைக்கணும்னு தீர்மானத்திலே இருந்தார். ஆகையினால் என்னை வேதம் படிக்கக் கூப்பிட்டார். நானும் வந்துட்டேன். நான் நான்காம் வகுப்பு படித்ததோடு சரி..!'' என்றார்.

அன்றுதொட்டு பதின்மூன்று வயது முடியும் வரை திருவிடைமருதூரில் வேதம் படித்திருக்கிறார் சுவாமிகள்.

திருவிடைமருதூரில் வேதம் படித்துக் கொண்டு இருந்தபோதே இவரது பதினான்காவது வயதில், பரமாச்சாரியார் இவரை பீடம் ஏற்கச் செய்ய முயன்றிருக்கிறார். ஆனால் அப்போது சாரதா சட்டம் வந்த நேரம்... பதினெட்டு வயது இருந்தால்தான் மடத்துப் பொறுப்பை ஏற்க முடியுமென்று பரமாச்சாரியாரைச் சுற்றி இருந்த சட்டம் அறிந்த பிரமுகர்கள் சொன்னார்கள். எனவே, பதினெட்டு வயது வரை திருவானைக்காவலில் மீண்டும் தொடர்ந்து வேதமும் சம்ஸ்கிருதமும் படிக்க அனுப்பி இருக்கிறார் மகா பெரியவர்.

பதினெட்டு வயது முடிந்ததும் மகா பெரியவரே குடும்பத்தோடு பாரத தேசம் முழுவதும் பார்த்துவர யாத்திரைக்கு அனுப்பினார். முதலில் திருப்பதி தரிசனம். பிறகு இந்தியா முழுவதும் பயணம். டெல்லி, பாராளுமன்றம், ஆக்ரா, தாஜ்மஹால் என்று எல்லாவற்றையும் பார்த்தார். 'தாஜ்மஹாலை அப்புறம் பார்க்க முடியாதே!' என்றார் பெரியவர்.

காஞ்சி திரும்பியவருக்கு ஓராண்டு காலம் கிரு஦#183்ண சாஹரம் என்ற எண்பது வயது பெரியவரைக் கொண்டு மடத்தில் நடக்கிற பூஜை தொடங்கி எல்லா நடைமுறைகளையும் போதிக்கச் செய்து, இந்த புதிய புனிதரை உருவாக்கி இருக்கிறார் பரமாச்சாரியார்!

அப்புறம்....?

அந்த ஆண்டு ஸ்ரீ மகா பெரியவாளின் அறுபதாவது பிறந்த வருடம். ஸ்ரீ ஜெயேந்திரர், காமகோடி பீடத்தின் அடுத்த மடாதிபதியாக முடிசூட்டப்படுகிறார். ஜய வரு஦#183ம் அது. 'ஜய' என்றால் 'வெற்றி' - 'பதினெட்டு' என்று ஒரு பொருள் உண்டு. பதினெட்டு வயது முடிந்த புதுப்பெரியவாளுக்கு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் என பெயர் சூட்ட இதுவே காரணமாயிற்று!

ஸ்ரீ மடத்தில் காலத்துக்கேற்ற பல மாறுதல்களைச் செய்தவர் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்பதை வரலாறு வாசிக்கத் தவறாது.

''அதற்கு முன்னெல்லாம் இந்த மடத்துக்கு மிக அதிகமாக பிராமணர்கள் மட்டும்தான் வந்து போவார்கள். மற்ற இனத்தவர்களின் வருகை ரொம்ப குறைவு. இவர்களே வராதபோது மாற்று மதத்தினர் எங்கே வருவது..?

இப்போது என்னிடம் எல்லா மக்களும் குறிப்பாக மாற்று மதத்தினரும் வருவார்கள். கிறிஸ்தவர், முஸ்லிம் எல்லாரும் வருகிறார்கள். 'தலித்' இன்னும் விசே஦#183மாக வருகின்றனர். இந்த மாறுதல் முன்னால கிடையாது. யாத்திரையில் எங்காவது உட்கார வைத்து சாப்பாடு போட்டு, துணிமணி கொடுத்திருப்பார்கள். மடத்துக்குள் அனுமதித்ததாக சரித்திரமே கிடையாது. இந்துக்கள் பிரியாமல் ஒன்றுபடவே இப்படி ஒரு முயற்சி!'' என்றார்.

''பள்ளியில் படிக்கும்போதே கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் ஒன்றாகச் சேர்ந்து சர்ச்சுக்கும், மசூதிக்கும் செல்வதைப் பார்ப்பேன். நாம் அப்படி ஒன்று சேராமல் இருக்கிறோமே என்ற வருத்தம் உண்டு. கோயில் தேர்த் திருவிழாக்களில் மட்டுமே ஒன்றுபட்ட மக்கள்! நமக்குள் இருக்கிற வித்தியாசங்கள் பற்றி என் மனம் சங்கடப்படும்.''

- ஸ்ரீ ஜெயேந்திரர் இதை விவரித்தபோது, அவர் முகம் முற்றிலுமாக வாடியது.

''மகா சுவாமிகள் உங்களிடம் குறிப்பிட்டு கேட்டுக்கொண்ட பணி ஏதாவது உண்டா?''

''நான்கு பணிகளைச் செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டார். கேரளா முழுவதும் அவர் சுற்றியபோதும், ஆதிசங்கரர் பிறந்த ஊரான காலடி போனதில்லை. 'நீ போய் ஆதிசங்கரரின் தாயார் சமாதியை வலம் வந்து அந்த பூமி மண்ணை நெற்றியில் இட்டுக்கொண்டு வா' என்றார். அதுபோல 'கேதார யாத்திரை போய்வா' என்றார். போனேன்.

அலகாபாத்தில் குமரீல பட்டர்னு ஒரு மிகப்பெரிய மீமாம்ஸகர் இருந்தார். அவரும் ஆதிசங்கரரும் சந்தித்த இடம், திரிவேணி சங்கமம்! வேதமும் வேதாந்தமும் சந்தித்த இடம்.. அந்த இடத்தில் ஏதாவது நினைவு மண்டபம் கட்ட வேண்டுமென்று ஆசைப்பட்டார். செய்தேன்.

கடைசியாக அவர் கூறியது - 'சிருங்கேரி மடத்துக்கும் நமக்கும் ஏதோ அபிப்ராய பேதம்னு சொல்லிக்கிட்டே இருக்காங்க. என்னை நடமாடும் தெய்வம்னு சொல்றாங்க; என் வாழ்நாளில் அப்படி ஒரு அபிப்ராய பேதம் இருக்க வேண்டாம்னு நினைக்கிறேன். ஏதாவது உனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் அந்த சாரதாம்பாளைப் பார்த்துவிட்டு வந்துவிடு...' என்றார் மகா பெரியவர்!

நரசிம்மராவ் இருந்தபோது.. எனக்கும் வேண்டியவர் - சிருங்கேரிக்கும் ரொம்பவும் தெரிந்தவரான அவரை வைத்து ஏற்பாடு செய்தோம். அயோத்தி சப்ஜெக்டை அங்கே எடுத்துக்கொண்டு போய், மடாதிபதிகள் துவாரகா, பூரி இதர சுவாமிகளையும் அங்கே வரவழைத்துப் பேச முடிவாயிற்று.

'ஆதிசங்கரர் பிறந்ததைப் பேசவேண்டாம்; சமாதி ஆனதைப் பேசவேண்டாம். இதர சமாசாரங்களை மட்டும் பேசுவோம்' என்று சிருங்கேரி சுவாமிகள் பெருந்தன்மையோடு கடிதமாகவே எழுதிக் கொடுத்துவிட்டார்.

அவரைப் பார்த்து - சாரதாம்பாளைத் தரிசித்து வந்தோம். ஆயிரக்கணக்கான மக்களும் மீடியாவும் இந்தியா முழுவதும் அப்போது அங்கே கூடியது. 'இவ்வளவு கூட்டத்தோடு சுவாமிகள் வருகிறாரே' என்று சிருங்கேரி சுவாமிகள் ஆச்சரியப்பட்டுப் போனார். மகா பெரியவர்களும் இங்கிருந்து சிருங்கேரி போகிறேன் என்றதும் ஒரு வெண்சாமரம் - ஒரு வெண்பட்டு இதெல்லாம் கொடுத்தார். சிருங்கேரி சுவாமிகளும் பரமாச்சாரியாருக்கு பிரசாதம் எல்லாம் கொடுத்து அனுப்பினார்கள். இதனை மகா பெரியவர் திருப்தியோடு பாராட்டினார்.

இதனையே ஒருமுறை விகடனில் நான் எழுதினேன். 'அவர் இச்சா சக்தி; நான் கிரியா சக்தி' என்று!'' என்கிறார்.

பேட்டி முக்கியமான கட்டத்துக்கு வந்தது.

2004 நவம்பர் தீபாவளிக்குப் பிறகு நடந்த கசப்பான அனுபவங்களை நினைவுகூர்ந்து, தயங்கித் தயங்கி காஞ்சிப் பெரியவரிடம் கேட்டோம்! அரசியல்வாதிகளிடம் கேட்பது போல கேட்கத் தோன்றவில்லை! வினாக்கள் வெளிவரவில்லை; அவர் எந்தத் தயக்கமும் இன்றி மிக மிக நிதானமாகப் பேசினார்.

''நான் எதற்கும் பயந்ததோ, வருந்தியதோ கிடையாது. என்னைப் பொறுத்தவரை மனசுல எதுவும் துளிகூட ஒட்டாது. கழுத்துக்குக் கீழே எதையும் கொண்டு போக மாட்டேன். சின்ன வயசுல இருந்தே அப்படிப் பழக்கம். பாலாற்றங்கரையில் மகா பெரியவாள் உபதேசத்துக்கு உட்கார்ந்தபோதே சொன்னார். 'உன்னிடம் பிரம்ம சக்தியும் இருக்கு; சத்ரீய சக்தியும் இருக்கு' என்றார். 'பிராமணனாகப்பட்டவன் அழக்கூடாது; சத்ரீயனானவன் ராஜ்ஜியத்துக்காக கவலைப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் ராஜ்ஜியம் நன்றாக நடக்கும்.இதனைப் புரிந்து நடந்துகொள்' என்றார் பெரியவர். எது நேர்ந்தாலும் வேத பிராமணர்கள் அழக்கூடாது. பிராமணன் அழுதால் நாட்டுக்கு ஆகாது. அரசன் கவலையின்றி இருந்தால் நாட்டுக்கு ஆகாது. என்னை யார் எது பண்ணினாலும் அதுபற்றி நான் கவலைப்பட மாட்டேன். ஈஸ்வர சொரூபத்தையும், மகா பெரியவாளையும் நினைத்துக் கொண்டே இருந்துவிடுவேன்'' என்று கண்களை சில நொடிகள் மூடிக்கொண்டார்.

'துறவிக்கு வேந்தனும் துரும்புதானே' என்று அப்போது சொல்லத் தொடங்கியபோது...

''அதெல்லாம் சரி. அந்தக் காலத்துல வேந்தன் இருந்தான். இந்தக் காலத்துல வேந்தன் எங்கே இருக்கிறான்? அரசியல்தானே இருக்கிறது...!'' என்று அடுத்த வி஦#183யத்தைப் பற்றி அவரே நகர்ந்தார்.

''மகா பெரியவர் வருத்தப்பட்டுக் கண்கலங்கியது ஒரு முறை.. நான் வருத்தப்பட்டது இரண்டு முறை. இந்திரா காந்தி குண்டுக்கு பலியானபோது மகா சுவாமிகள் கண்கலங்கிவிட்டார். ஒரு தலைவியை - அதுவும் ஒரு பெண்மணியை பாதுகாப்புக்கு இருந்த ஒருவன் சுட்டுக் கொன்றது கேட்டு மகா பெரியவர் கண் கலங்கினார். 'என் மீது ரொம்ப நம்பிக்கை வைத்திருந்தாரே' என்று இந்திரா காந்தியை நினைத்து வருத்தப்பட்டார். மகா பெரியவர் ஒருவரையே முழுவதுமாக நம்பினார் இந்திரா. தன் மனசில் இருப்பதை எல்லாம் அவரிடம் தெரிவிப்பார்'' என்று கூறினார் ஸ்ரீ ஜெயேந்திரர்.

''நான் கண் கலங்கியது இரண்டு முறைதான். ஒன்று மடத்தில் என்னோடு இருந்த யானை இறந்தபோது. அடுத்தது மகா சுவாமிகள் மறைந்தபோது. மற்றபடி அஞ்சா நெஞ்சன். ஜெயில் அதிகாரி கூட என்னிடம் கேட்டார்

'சுவாமிகளே.. சிறைக்கு வந்தால் எல்லோரும் அழுகிறார்கள். நீங்கள் மட்டும் வெளியில் இருந்தபோது இருந்த மாதிரியே கலகலவென்று சிரித்தபடியே யாருக்கோ நடந்தது போல இருக்கிறீர்களே?' என்றார்! இந்த உடம்புக்கு வரும் வலியெல்லாம் எனக்கு கிடையாது!'' சுவாமிகள் தீர்க்கமாக கூறினார்!

எழுபத்தைந்து வயதில் பவழ விழா நாயகராக! அண்மையில் நிகழ்ந்த பெரியவரின் கர்நாடக மாநில யாத்திரை பற்றி பேச்சு திசை திரும்பியது. இவரை ஒரு சங்கராச்சாரியாராகப் பார்க்காமல், அங்கே மக்கள் எழுச்சி மிகுந்த இந்து சமய தலைவராகவே வரவேற்று இருக்கிறார்கள்!

''மற்ற சங்கராச்சாரியார்கள் யாருடனும் பழக மாட்டார்கள். நான் மட்டும்தான் எல்லோருடனும் சிரித்துப் பேசி, பழகி, கேட்கிற கேள்விக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.. சாதி, சமய வேறுபாடு இன்றி என்னிடம் மக்கள் வருகிறார்கள்'' என்கிறார்.

ஸ்ரீ சந்திரசேகரேந்திர நிகர்நிலைப் பல்கலைக்கழகம் காஞ்சிக்கு மிகப்பெரிய பெருமை என்கிறார். ஐம்பதாயிரம் அரிய நூல்கள்; சம்ஸ்கிருதத்தில் இங்கே சேர்த்து வைக்கப்பட்டுள்ளது. திருப்பதியில் காஞ்சி காமகோடி பீடம் - ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹெல்த் ஃபவுண்டே஦#183ன் என்று ஒரு டிரஸ்ட் ஏற்படுத்தி, இந்த மாதம் அறுபது ஏக்கர் நிலத்தில் பூமி பூஜை கூட போட இருக்கின்றனராம். இது மிகப்பெரிய மருத்துவ பல்கலைக்கழகமாக இருக்குமென்கிறார்.

''முதல்வர் ராஜசேகர ரெட்டி விமான விபத்தில் இறப்பதற்கு முதல் நாள் நிலம் ஒதுக்கி கையெழுத்திட்டார்!'' என்றார்.

சுவாமிகளுக்கு கழுத்து எலும்பு ஒன்று தேய்ந்து கடைசியில் உடைந்தே போயிருக்கிறது. சென்னையைச் சேர்ந்த டாக்டர் கல்யாணராமன் இதனை பரிசோதித்து, மும்பைக்கு பரிந்துரை செய்துள்ளார். 'ஹிந்துஜா' மருத்துவமனை டாக்டர் பி.கே.மிஸ்ரா அறுவை சிகிச்சை செய்து மூன்று மணி நேரத்தில் அதனை சரி செய்திருக்கிறார்.

''எனக்கு சர்க்கரை நோய் என்று பயந்தவர்கள் உண்டு. கொஞ்சம் இருந்தது. பிறகு ஓடிப்போய்விட்டது. சர்க்கரை, பிளட் பிரெ஦#183ர் இருந்தால் இதெல்லாம் அவ்வளவு எளிதாக முடியுமா'' என்று கேள்வி எழுப்புகிற அவர், சர்க்கரை நோயாளிகளுக்கு ஆலோசனை சொன்னார்.

''காற்று ஓட்டம் உள்ள இடத்தில் எப்போதும் இருக்க வேண்டும். வேளைக்கு அளவோடு சாப்பிட வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். நன்றாகத் தூங்க வேண்டும். நன்றாக நடக்க வேண்டும். இதெல்லாம் என்னிடம் இருப்பதால் வந்த சர்க்கரை வழி தெரியாமல் ஓடிப்போச்சு'' என்று கலகலக்கிறார்.

மீடியாக்கள் சரியில்லாமல் போனதாலேயே 'சங்கரா டி.வி.' ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றார் அவர். அரசு தொலைக்காட்சியே ஆபாசத்தை நோக்கிப் போவதாக வேதனைப்பட்டார். கேபிள் டி.வி. சுதந்திரமாகச் செயல்பட வழி காண வேண்டும் என்றார்.

கடைசியாக ''பால பெரியவாள் பற்றி...?'' என்று பேசத் தொடங்கியதுமே அதற்கும் பதில் சொன்னார் பெரியவர்.

''அப்போது எனக்கு 50 வயது நெருங்கும் வேளை.. மடத்துச் சூழலும் இங்கே உட்கார்ந்துகொண்டு, நிறைந்த கட்டுப்பாடுகளுக்கு நடுவே செயல்படுவதும் கொஞ்சமும் பிடிக்கவில்லை. பொறுப்பாக யாரையாவது வைத்துவிட்டு வெளியேற நினைத்தேன். திருவண்ணாமலை போளூரில் வி.எஸ். ல஦#183்மண அய்யர் என்பவர் அவரது வீட்டை மடத்துக்கு கொடுத்த நேரம். அந்த இடத்தில் வேத பாடசாலை ஒன்றை ஆரம்பித்து, பால பெரியவரோட அப்பாவை அங்கே அமர்த்தி, இந்தப் பையனையும் (பால பெரியவர்) அங்கே படிக்கச் செய்தோம்.

என்னை விட புத்திசாலி. சின்ன வயதில் நான்கு ஐந்து முறை சொல்லுகிற வி஦#183யங்களை ஒரே தடவையில் புரிந்துகொள்ளும் ஆற்றல். நான் ஏழு எட்டு வருடத்தில் படித்ததை மூன்றே ஆண்டில் முடித்த திறமைசாலி. அவ்வளவு நல்ல சுறுசுறுப்பு.

நான் குஜராத்தில் 'கேம்ப்'பில் இருந்தேன். சித்தப்பூர் என்ற ஊர். அந்த ஊர் 'மாத்ரு கயா' - அம்மா இறந்துபோன உடனே பிண்டம் போடக்கூடிய ஊர். சரஸ்வதி நதி வெளிப்பட்டு இரண்டு கிலோமீட்டர் தூரம் ஓடி அடங்கிவிடுகிற இடம். நவராத்திரி சமயம்.. படித்து முடித்துவிட்டு வந்த இந்தப் பையனை மீண்டும் அப்போது பார்த்தேன். ஐந்து கேள்விகள் கேட்டேன். திருப்தியாக பதில் வந்தது.

1982-ல் மெஹபூப் நகரில் இருந்த பெரியவரிடம் இவருக்குப் பட்டம் சூட்ட அனுமதி கேட்டேன். வேண்டாம் என்று சொல்லவில்லை. மௌனத்தைச் சம்மதமாக ஏற்று முடிசூட்டினோம், 1983 மே 29-ல்!

1983 வியாச பூஜை - கர்னூலுக்கு பெரியவரும் அவரைத் தொடர்ந்து பால பெரியவரும் பயணப்பட்டனர். 'பால பெரியவாளை நியமித்தாகிவிட்டது. என் வேலை முடிஞ்சு போச்சு. நான் மடத்தைவிட்டு வெளியேறி தனிமையில் இருக்க விரும்புகிறேன். நான் போயிட்டு வர்றேன்' என்று அங்கு போய் பரமாச்சாரியாரிடம் பக்குவமாகத் தெரிவித்தேன். திடுக்கிட்டவர் போல ஆனார். வருத்தப்பட்டார். 'எனக்கு வயசாயிடுத்து. நான் கிழம். அவன் துளிர் பிள்ளை. விட்டுட்டுப் போறேங்கிறியே. நாங்க என்ன பண்ணுவோம்..' என்று உரக்க கத்து கத்துன்னு கத்தினார். பயந்து போயிட்டேன்.

'சரி என்ன பண்ணணுங்கிறீங்க' இது நான்.

'நீ மடத்தில் இருந்துதான் ஆகணும்' என்றார்.

'இந்த 'கேம்ப்' எல்லாம் மூட்டை கட்டி வச்சுட்டு காஞ்சி மடத்துல நீங்க வந்து உட்காருங்க. அப்படியானால் நான் வருகிறேன்' என்றேன். மகா பெரியவரும் வந்தார். அதற்கு பிறகு

காஞ்சிபுரம் விட்டு போகவில்லை; இங்கேயே இருந்து முக்தியடைந்தார்'' என்கிறார் ஜெயேந்திரர்.

'மடத்துக் கெடுபிடிகள் பிடிக்காமல்தான் தலைக்காவேரிக்குப் போனது' என்றவர், ''மகா பெரியவரிடம் நிர்வாகப் பொறுப்பு இல்லை; புதுப் பெரியவர் மேஜர் ஆகல; சின்ன வயசு! நானும் இல்லையென்றால் சட்டப்படி சரியாகாது. மடம் அறநிலையத்துறையிடம் போய்விடும் என்ற குழப்பம். ஜனாதிபதி ஆர்.வி வரை தலையிட்டார்கள் என்பதால் உடனே திரும்ப நேரிட்டது'' என்றார்.

இன்றைய 'அரசியல்' பலவிதங்களில் சுவாமிகளைப் பாதித்திருக்கிறது.

''தீவிரவாதம் வளர்கிறது என்றால் என்ன அர்த்தம்? அரசுக்குத் தைரியம் வேண்டும். சீனாக்காரன் அடாவடியாகப் பேசுகிறான் என்றால், நீ அவனை விட உரத்த குரலில் கண்டித்தால் அடங்கிவிட மாட்டானா? சீனா, ஸ்ரீலங்கா வி஦#183யங்களில் எல்லாம் மத்திய அரசு போக்கு புரியவில்லை'' என்கிறார்.

''தமிழ் மக்கள், சாதி பாகுபாடுகளை மறந்து ஒற்றுமையாக - கடவுள் பக்தியோடு இருக்க வேண்டும்'' என்கிறார்.

பேட்டி முடிவுக்கு வந்தது. 'எனது நீண்ட பயணத்தில் ஆயிரமாயிரம் நிகழ்ச்சிகள்.. வி஦#183யங்கள்' என்றவாறு ஸ்ரீ ஜெயேந்திரர் ஆசி வழங்கினார்.

மடத்தை விட்டு வெளியே வந்து நீண்ட நேரமாகியும் சுவாமிகளின் கணீர் பேச்சு பல மணி நேரம் காதுகளில் ஒலித்தவாறு இருந்தது.

சுவாமிகளின் காவி உடை கம்பீரத் தோற்றம் இப்போதும் கண்களில் நிற்கிறது.

நன்றி: Inbox item - திரு. வாசன் அய்யர்

'உண்பது நாழி; உடுப்பது நாலு முழம்'




G. Soundara Rajan

Posts : 10
Join date : 2011-06-11

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum